Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை (15) காலை 9.00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலகப் பிரிவு, களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, அகலவத்தை, பதுரலிய, வலல்லாவிட்ட மற்றும் மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகள், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவு ஆகியவை அதிக அவதான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் தும்பனை, யட்டிநுவர, உடுநுவர, ஹாரிஸ்பத்துவ உள்ளிட்ட பல பிரதேசங்கள் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனெல்லை, ரம்புக்கனை உள்ளிட்ட பகுதிகளும் எச்சரிக்கை வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவு அறிகுறிகளான நிலப் பிளவுகள், மரங்கள் சாய்வு, திடீர் நீரோட்ட மாற்றங்கள் போன்றவை தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
செய்திகள்

தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

October 24, 2026
மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!

October 24, 2026
பிக்குமாரின் ஆடை விதிமுறைகள்; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
செய்திகள்

பிக்குமாரின் ஆடை விதிமுறைகள்; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

October 24, 2026
“மக்களுக்கு நிவாரணம் கிடைத்தால் 500 நாட்களும் சிறையில் இருக்கத் தயார்”; நாமல் ராஜபக்ஷ!
செய்திகள்

“மக்களுக்கு நிவாரணம் கிடைத்தால் 500 நாட்களும் சிறையில் இருக்கத் தயார்”; நாமல் ராஜபக்ஷ!

October 24, 2026
சம்மாந்துறையில் உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
செய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

October 24, 2026
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணைக்கு கனடாவிடம் சிறீதரன் கோரிக்கை!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணைக்கு கனடாவிடம் சிறீதரன் கோரிக்கை!

October 24, 2026
Next Post
கொத்மலை – கம்பளை வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

கொத்மலை - கம்பளை வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு