ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்து பணியாற்றுமாறு கோரப்பட்டுள்ள ஏழு விசேட மருத்துவர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதாக சுகாதார அமைச்சு உறுதியளித்த போதிலும் கடந்த மூன்று
மாதங்களாக எவ்வித கொடுப்பனவும் வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஓய்வு பெறவிருந்த 69 நிபுணர்களில் 53 பேர் ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளனர்.
இவர்களில் ஏழு பேர் மட்டுமே சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் பணியில் இணைந்துள்ளனர் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுதெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், பணிக்கு திரும்பிய இந்த ஏழு மருத்துவ நிபுணர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை சுகாதார அமைச்சு இன்னும் வழங்கவில்லை.
மீள அழைக்கப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான ஹோமாகம மருத்துவமனையின் சிரேஷ்ட
விசேட சத்திரசிகிச்சை நிபுணரான மருத்துவர் தம்மிக விக்கிரமசேகர, தான் ஜூன் மாதம் ஓய்வுபெற்றார்
என்றும், ஆனால், மருத்துவமனையின் அவசர தேவைகள் காரணமாக மீண்டும் அழைக்கப்பட்டா
ரெனவும் அவர் பணிக்குத் திரும்பியதிலிருந்து கூடுதல் நேரக் கட்டணம் உட்பட எந்தப் பணமும் பெற
வில்லை எனவும் தெரிவித்தார் எவ்வாறாயினும், இந்த பிரச்னை குறித்து சுகாதார
அமைச்சு பொது சேவைகள் ஆணையத்திடம் அறிவித்த போதிலும் இதுவரை பதில்கள் கிடைக்கவில்லை.
சுகாதார அமைச்சு இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்துவதும், மீள அழைக்கப்பட்ட நிபுணர்களுக்கு அவர்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதும் மிக முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.