ரயில்வே திணைக்களத்தின் மறுசீரமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை அடுத்த மாத முற்பகுதியில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
குழு மீண்டும் இன்று (20) கூடவுள்ளதாக அதன் தலைவரும் துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருமான K.D.S.ருவன்சந்திர தெரிவித்தார்.
ரயில்வே திணைக்களத்தின் செயற்பாட்டு நட்டத்தை ஈடுசெய்து சிறந்த சேவையை வழங்குவதற்கான முன்மொழிவுகளை இந்த குழு பரிசீலிக்கவுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரும் இந்த குழுவில் அங்கம் வகிப்பதாக K.D.S.ருவன்சந்திர கூறினார்.
யோசனை தயாரிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கருத்துகள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.