பறந்துக் கொண்டிருந்தபோது திடீரென காணமல் போன அமெரிக்க மரைன் கார்ப்ஸின் மேம்பட்ட F-35B லைட்னிங் ஸ்டெல்த் ஜம்ப் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதை அரசு உறுதிப்படுத்தியது. செப்டம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெற்கு கரோலினாவில் பறக்கும் போது, அந்த விமானம் மாயமானது. பறந்துக் கொண்டிருந்த விமானத்தை, அதை இயக்கிக் கொண்டிருந்த விமானி, தன்னியக்க பைலட் பயன்முறைக்கு மாற்றிவிட்டு, அவர் எமர்ஜென்சி முறையில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானம் காணாமல் போனதும், விமானி ஏன் திடீரென்று வெளியேறினார் என்பதும் மர்மமாக இருந்த நிலையில், தற்போது விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. அவசரகால நிலையை பயன்படுத்தி வெளியேறிய விமானி (Pilot Of F-35B Jet) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஏன் விமானத்தை தானியக்க முறைக்கு மாற்றினார் என்பதோ, அதற்கான சூழ்நிலைகள் என்ன என்பதோ ரகசியமாகவே உள்ளது.