இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய அவுஸ்திரேலிய பெண், பிரதிவாதி சார்பில் தோன்றிய வழக்கறிஞரான முருகன் தங்கராஜின் கடுமையாக குறுக்கு விசாரணைக்கு
முகம்கொடுத்தார்.
இந்த வழக்கு நேற்று (19) இரண்டாவது நாளாக சிட்னி நகரின் டவுனிங் சென்ட ர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பாலியல் உறவின்போது இடம்பெற்றஆபாசமான சம்பவங்கள் குறித்து தங்கராஜ்
எழுப்பிய கேள்விகளால் அந்தப் பெண் நீதி மன்றத்தில் கண்ணீர் விட்டுள்ளார்.
வீடியோ தொழில்நுட்பத்தின் மூலமே இந்த வழக்கு விசாரணைக்கு சிட்னி நகரைச் சேர்ந்த 29 வயதான அந்தப் பெண் தோன்றியுள்ளார். குணதிலக்க தன்னை ஆணுறை பயன்படுத்த வேண்டாம் என்று வற்புறுத்த முயன்றதாக அந்த பெண் திங்களன்று கூறியிருந்தார். என்றாலும் அது அவ்வாறு இல்லை என்று தங்கராஜ் வலியுறுத்தினார். “அன்றிரவு ஆணுறை அணிய விரும்பவில்லை என்று அவர் (குணதிலக்க) ஒருபோதும் கூறவில்லை” என்று தங்கராஜ் தெரிவித்தார். “பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபடுவதற்கு அவர் உங்களை ஒரு
போதும் வலியுறுத்தவில்லை” என்றார். அதற்கு பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்தப் பெண், “அது உண்மையில்லை” என்று மறுத்தார். கிரிக்கெட் வீரரை ஏன் தனது படுக்கை அறைக்குள் அனுமதித்தீர்கள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றினீர்கள் என்று குணத்திலக்க சார்பில் வாதாடும் வழக்கறிஞர் மேலும் கேள்வி எழுப் பினார். “அவரை படுக்கையறைக்கு அழைத்துச் செல்ல நீங்கள் எடுத்த முடிவு, அந்த இரவில் இயல்பான ஒன்று இல்லையா?” என்று கேட்டார்.
இந்தக் கூற்றை அந்தப் பெண் மறுத்தார். அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் குணதிலக்க ஆணுறையை அகற்றினாரா அல்லது இல்லையா என்பது தொடர்பிலேயே நேற்றைய வழக்கு விசாரணையில் அவதானம்
செலுத்தப்பட்டது.
நீதிபதி சாரா ஹுக்கட் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இன்றைய தினத்திலும் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணியுடன் சென்றபோ தே குணதிலக்க மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குணதிலக்கவுக்கு எதிராக ஆரம்பத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட போதும் அதில் 03 குற்றச்சாட்டுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக பாலியல் உறவில் ஈடுபட்டகுற்றச்சாட்டு மாத்திரம் அவர் மீது தொடர்ந்து நீடிக்கிறது. பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதலில்
ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு தற்போது சிட்னி நகரில் சிக்கி இருக்கும் குணதிலக்க பிணையில் விடுவிக்கப்பட்டபோதும் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடகத்தை பயன்படுத்த ஆரம்பத்தில் அவருக்கு கட்டுப்பாடு இருந்தபோதும் அது தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.