எலான் மஸ்க் உரிமையாளராக விளங்கும் நியூரோலிங்க் நிறுவனம் மனிதர்களிடத்தில் சோதனையை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இது மனிதனின் மூளையில் பொருத்த்தக்கூடிய வகையில் சிப்களை நியூரோலிங்க் தயாரித்துள்ளது.
இது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக
அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நியூராலிங்க் நடாத்தவிருக்கும் பரிசோதனைக்கு தானாக முன்வந்து விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்து அதற்கான விண்ணப்பங்களினை அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பதிவேற்றியுள்ளது.
மனிதர்களின் மூளையில் சிப்களைப் பொருத்தி சோதனை மேற்கொள்ள முறையான அனுமதியினையும் பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பக்கவாத நோயினால் பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தப்படவுள்ளது.
இதன் மூலம் அவர்களது எண்ணத்தின் அடிப்படையில் கணினியின் கர்சர் (curcer) மற்றும் விசைப்பலகையால் கட்டுப்படுத்தப்படும் நிலையில் இந்த சிப் உருவாக்கப்பட்டுள்ளது.
நியூரோலிங்க் விஞ்ஞானிகளின் ஆறு ஆண்டு காலம் இந்த ஆய்வவின் விளைவாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த சோதனை வெற்றி பெற்றால் வணிக ரீதியாக நியூராலிங்க் சிப்கள் சந்தையில் விற்பனைக்கு வர இன்னும் பத்து ஆண்டு காலம் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (Interface) இணைப்பை உருவாக்கும் வகையிலான சிப்பையும் நியூரோலிங்க் உருவாக்கி வருகிறது.
மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.