உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணத்தை ஐ. நா. மனித உரிமைகள்
ஆணையாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அசாத் மௌலானா அனுப்பி வைத்துள்ளார்
என்று கூறப்படுகின்றது.இதேநேரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானாவின் தகவல்கள் அடங்கிய சனல் -4 ஆவணப் படத்தின் விடயங்களை நிராகரித்து புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலே ஐக்கிய இராச்சியத்தின் ஒளிபரப்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவுக்கு (ஒவ்கொம்) அனுப்பிவைத்த முறைப்பாட்டை அந்த ஆணைக்குழு நிராகரித்துள்ளது என்றும் அறிய வருகின்றது.
இதேவேளை, சனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு நேரடியாக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களும் பிரச்னையில் உள்ளன.
இவ்வாறான சட்ட நடவடிக்கையில் தனியார் சட்ட அமைப்பு ஒன்றை ஈடுபடுத்தினால் அதற்காக 50 இலட்சம்
ஸ்ரேலிங் பவுண்ஸ் செலவாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன