நாட்டில் 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைக்கு அதிகமாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த பெரும்போகம் மற்றும் சிறுபோகத்தில் மொத்த நெல் அறுவடை சுமார் 52 இலட்சம் மெட்ரிக் டன்னாக பதிவாகியுள்ளது.
அதனூடாக 31 இலட்சம் மெட்ரிக் டன் அளவு அரிசியை உற்பத்தி செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வருடாந்த அரிசித் தேவை சுமார் 24 இலட்சம் மெட்ரி டன்களாகும்.
எனவே 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைக்கு மேலதிகமாக உள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி அடுத்த பெரும்போக அறுவடை வரை அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.