பிரபல அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரான Breaking Bad இல் வால்டர் வைட் ஜூனியர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆர்.ஜே. மிட்டே (RJ Mitte), தனது 34ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், பிரவுன்ஸ்வில்லில் ஒக்டோபர் 12ஆம் திகதி அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

பெருமூளை வாதத்துடன் வாழ்ந்த மிட்டே, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் சமூக உள்ளடக்கத்திற்காகவும் குரல் கொடுத்து வந்தார். அவரது மறைவுக்கு Breaking Bad தொடரில் நடித்த ஆரோன் போல் உள்ளிட்ட சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.








