கிராம உத்தியோகத்தர் ஒருவர் விற்பனை நிலையம் ஒன்றில் களவாடிய சம்பவம் தொடர்பாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேற்குறித்த சம்பவம் தொடர்பில் விற்பனை நிலைய சீசீரிவி காணொளியில்,
குறித்த கிராம உத்தியோகத்தர் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்து அங்குமிங்கும் பார்த்த பின்னர் தாம் அணிந்திருந்த ஜேர்சியை ஓரிடத்தில் கழற்றிவைக்கின்றார்.
அதன் பின்னர் ஜேர்சியையும் தனது கைப்பையையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்த ஏதோ ஒரு பொருளை தனது ஜேர்சிக்குள் மறைத்து வைத்துக்கொள்கின்றார்.
அத்துடன் , அங்கிருந்த ஒரு சோடி காலணியையும் திருடிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயற்சிக்கின்றார். இது சீசீரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மக்களுக்கு சேவை செய்யும் அரச ஊழியர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளமை குறித்து பல்வேறு விசனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.