மட்டக்களப்பின் பிரபல ஆண்கள் பாடசாலையான மட் / புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த கல்லூரி தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை(30.09.2023) ‘MIKE WALK’ என்னும் நடைபவனி நடைபெற்றது. அதிலும் விஷேட விதமாக இவ்வாண்டு குறித்த பாடசாலையின் 150 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக மிகவும் கோலாகலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காலை 8.30 மணியளவில் பாடசாலையின் வளாகத்திலிருந்து ஆரம்பமான இந்நடைபவனி மட்டக்களப்பு பிரதான கோபுர வீதி வழியாக சென்று திருமலை வீதியினூடாக Co-op in விடுதிவரை சென்று மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிமனை வீதி வழியாக சென்று மட்டக்களப்பு அரசடி சுற்றுவட்டத்தினினூடாக திரும்பி மீண்டும் மட்டக்களப்பு பிரதான கோபுர வீதியூடாக சென்று பாடசாலையை மதியம் 1.00 மணியளவில் அடைந்தது.
இதில் ஒவ்வொரு வகுப்பு பிரிவு பழைய மாணவர்களும் தனித்துவமான முறையில் வாகன அலங்கரிப்பு, வைத்திய கருவிகள் ஒழுங்கமைப்பு, நடன கலைஞர்கள் ஒழுங்கமைப்பு என கோலாகலமான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் பல மாணவர்கள் சமூகத்திற்கு முன்னுதாரணமான முறையில் வீதி சுத்திகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டு குறித்த நடைபவனியில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.