நாட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வு, நாடளாவிய அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என தேசிய நுகர்வோர் முன்னணி தலைவர் அசேல சம்பத் நேற்று (12) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மின்சாரம் பற்றிய அதிக செலவுகள், உணவுத் தயாரிப்பு மற்றும் விநியோகச் செலவுகளை நேரடியாக பாதிக்கும். இதன் விளைவாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.