இன்றையதினம் (30.09.2023) மட்/புனித மிக்கேல் கல்லூரியின் Mike Walk நடைபவனியின்போது கலந்து கொண்ட மாணவர்கள் பலர் சமூகத்திற்கு முன்னுதாரணமாக செயற்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.
வீதியில் முன்பு கிடந்த கழிவுகளையும் குறித்த நடைபவனியில் பங்குபற்றிய மாணவர்களால் பாவிக்கப்பட்டு வீதியோரங்களில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கழிவுகளையும் அதே Mike Walk ல் கலந்து கொண்ட சில பழைய மாணவர்கள் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனத்தில் சேகரித்ததை அவதானிக்க முடிந்தது.
நாம் ஒவ்வொருவரும் சமூகப்பொறுப்புடனும் சூழல் நேயத்துடனும் இருக்கவேண்டும் என்பதை தங்களது செயல்மூலம் வெளிக்காட்டி ஏனையோருக்கும் முன்மாதிரியாக செயற்பட்ட Michalitesற்கு பாராட்டுகளை தெரிவிப்பதில் Battinaatham ஊடகம் மகிழ்ச்சியடைகிறது.