இரண்டாம் உலகப் போரில் பசுபிக் பெருங்கடலில் மூழ்கிய ஜப்பானின் இரண்டு விமான தாங்கிக் கப்பல்களையும், அமெரிக்காவின் ஒரு கப்பலையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
முதன்முறையாக மூழ்கிய ஜப்பானிய கப்பலை காணொளி பதிவு செய்துள்ளனர்.
மிட்வே சண்டை எனப்படும் இந்தத் தாக்குதலில் ஜப்பானின் இந்த இரு விமான தாங்கிக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான், ஜப்பான் வசமிருந்த பசுபிக் பெருங்கடலின் கட்டுப்பாடு அமெரிக்கப் படைகள் வசம் மாறியது.
1942 ஜூனில் நடந்த சண்டையில் மூழ்கடிக்கப்பட்ட அகாகி, காகா என்ற இரு ஜப்பானிய கப்பல்களும் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் யார்க்டவுன் என்ற கப்பலும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4.8 கிலோ மீட்டர் ஆழத்தில் கிடப்பதைத் தற்போது கடலடித் தொல்லியல் ஆய்வில் நீர்மூழ்கிகள் கண்டறிந்து படம் பிடித்துள்ளன.
இதேவேளை கப்பல்களில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சண்டையின்போது என்ன நடந்து என்பதைத் தெரிந்து கொள்ள தற்போதைய ஆய்வின்போது எடுக்கப்பட்ட தெளிவான காணொளிகள் உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.