ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக சுகாதார
அமைச்சு தொடர்பாக தேசிய கணக்காய்வு பணிமனையின் அறிக்கையிலேயே இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.
அதன் கணக்காய்வு அறிக்கையின்படி 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை ஆயிரம்
பிறப்புகளில் 12.3 ஆக அதிகரித்துள்ளது.சுகாதார அமைச்சின் பேண்தகைமை சுட்டெண்ணின் படி 05 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் ஆயிரம் பிறப்புகளில் 07 ஆக பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிசெம்பர் 31, 2021 நிலவரப்படி ஆயிரத்துக்கு 10.5 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை டிசெம்பர் 31, 2022
இற்குள் 12.3 ஆக மோசமாக சென்றுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. மேலும், மகப்பேறு இறப்பு விகிதம்
ஒரு இலட்சம் பிறப்புகளுக்கு 29.5 ஆக அதிகரித்து வருவதாகவும், புதிதாக பிறந்த குழந்தை (ஒரு மாதத்
துக்கு உட்பட்ட குழந்தைகள்) இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 6.8 ஆக அதிகரித்து வருவதாகவும் அறிக்கை கூறுகிறது.