கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2,340 பேர் பட்டதாரிகள் என தெரியவந்துள்ளது.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிவரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள
அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட பட்டதாரிகளில் பெண்கள் 41 பேரும் ஆண்கள் 2,299 பேரும் உள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் கைதாகி, சிறைக்கு வந்த பட்டதாரிகளின் மொத்த எண்ணிக்கையில் கடந்த வருடம் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பை விட உயர்கல்வி பெற்ற 121 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 8,420 ஆகும்.சாதாரண தரத்தில் தேர்ச்சி பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 7,168 ஆகும். சிறையில் அடைக்கப்பட்ட வர்களில் மிகக் குறைவானவர்களே பாடசாலைக்கு செல்லாதவர்களாகும், அவர்களின் எண்ணிக்கை 836 பேராகும்.
கடந்த வருடத்தில் தரம் 08 இல் சித்தியடைந்த 6,747 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு
சிறையில் அடைக்கப்பட்ட மொத்த 30,331 கைதிகளில் 17,928 பேர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் என்பதையும் இந்தத் தரவு காட்டுகிறது.