மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பேச்சுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையிலேயே ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை திருத்தியமைக்குமாறு மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
எவ்வாறாயினும், எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் தாம் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா, காலியில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்தார்.