இந்திய முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் மாநாடு இன்று தொடங்கி நடந்து வருகிறது. 2 நாள் கூட்டமான இதில் தற்போது முக்கியமான உத்தரவுகளை இந்திய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக வருடா வருடம் அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் மாநாடு இதுவாகும்.
இதில் சட்ட ஒழுங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் பொதுவாக எடுக்கப்படுவது வழக்கம். அதே சமயம் போலீசார், மாவட்ட ஆட்சியர்களுக்கு பல முக்கிய உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் ஸ்டாலினின் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இன்று நடக்கும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும், கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும், குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் சமூக தளங்களை கண்காணிக்க வேண்டும் ,உண்மைக்கு புறம்பான செய்திகள் அதிகம் வருகின்றன. மக்கள் புகார் அளிப்பதற்கு பிரத்யேக வாட்ஸ் அப் எண் உருவாக்க வேண்டும், சமூக ஊடகங்களில் பொய் தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.