இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், 11 மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று இரவு நாடு திரும்ப உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு தனுஷ்க குணதிலக்கவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்துள்ள போதிலும், கிரிக்கெட் வீரருக்கு விதிக்கப்பட்ட தற்காலிக இடைநீக்கம் குறித்த முடிவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) இன்னும் அறிவிக்கவில்லை.