தனியார் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் வவுனியா பாரதிபுரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தனியார் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த சிறுமி வீதியில் மறித்த இளைஞர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். சிறுமியின் பெற்றோர் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டையடுத்து பொலிஸார் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பொலிஸார் இளைஞரை தேடிச் சென்ற நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். அந்த
இளைஞரை கைது செய்யப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.