மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிப்புறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் இன்று (3) கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
இதில் நீதித்துறை சுதந்திரத்துக்காக குரல் கொடுப்போம்,சட்டத்தின் முன் யாவரும் சமம், நீதித்துறையை அச்சுறுத்தாதே, பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், சுதந்திரத்தில் தலையிடாதே போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றம், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம், களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மாவட்ட நீதவான் நீதிமன்றம், தொழிலாளர் நியாயசபை நீதிமன்றம் உட்பட 8 நீதிமன்றங்களில் சட்டத்தரணிகளின் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.