நாட்டின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு சீன எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எமது நாட்டின் பிரதான இருதரப்புக் கடனாளியான சீனா, எமது நாட்டின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான ஆரம்ப இணக்கப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சீன எக்சிம் வங்கி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இங்கு வலியுறுத்தியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், பொருளாதார நெருக்கடியின் போது எமது நாடு 46 பில்லியன் டொலர்களை கடனாக வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டியிருந்ததாகவும், பலதரப்புக் கடன்களை எமது நாடு தொடர்ச்சியாக செலுத்தி வருகின்ற போதிலும், இருதரப்பு கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும், அங்கு முக்கியமாக கடன் கொடுத்த தரப்பு சீனா என்று கூறினார்.
இதன்படி, சீன எக்ஸிம் வங்கியினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானமானது எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும் அது தொடர்பான சகல விடயங்களுக்கும் மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.