இலங்கையில் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குழந்தைகள் பிறப்பின் போது, 1000 குழந்தைகளில் 12.3 வீதமான குழந்தைகள் உயிரிழப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால், சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2030ம் ஆண்டாகும் போது, இந்த இறப்பு சதவீதத்தை 7 வரை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த சதவீதமானது, 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி 10.5 வீதமாகவும், 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி 12.5 சதவீதமாகவும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.