யுத்தம் காரணமாக பிரிந்த திருகோணமலையை சேர்ந்த தம்பதியினர் 33 வருடங்க ளின் பின்னர் ஒன்று சேர்ந்துள்ளனர்.
யுத்தம் ஆரம்பித்த காலப் பகுதியில் , மனைவி தனது பிள்ளையுடன் கொழும்புப் பகுதிக்கு பாதுகாப்பாக இடம் பெயர்ந்துள்ளார்.
பின்னர் கணவருடனான தொடர்புகள் அற்ற நிலையில் , விகாரைகள், தேவாலயங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தங்கி வந்துள்ளதுடன் அங்கு வருபவர்களின் உதவிகளுடன் உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் , வைத்தியசாலை ஊழியர்களினால் அந்தப் பெண்ணின் அடையாளங்களை வெளிப்படுத்தி கணவர், உறவினர்களைத் தேடி கண்டுபிடித்துள்ளனர்.
33 வருடங்களின் பின்னர் தம்பதியினர் ஒன்றிணைந்தது தமது அன்பை வெளிப்படுத்திக் கொண்டமை அங்கிருந்தவர்கள் மத்தியில் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியது.