இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், தற்போதைய சர்வதேச கிரிக்கெட் நடுவருமான பிரபல குமார் தர்மசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாரஹென்பிட்டி பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான வீடு ஒன்றுக்குள் பிரவேசித்து வீட்டில் வசிப்பவரை ஆயுதங்கள் கொண்டு மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குமார் தர்மசேன நிறுவனம் ஒன்றின் தலைவராக கடமையாற்றி வருகிறார் என்பதுடன் அவரது மனைவி மற்றும் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமைத்துவ பணிப்பாளரினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம் தர்மசேன உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குமார் தர்மசேன தற்போது உலகக் கிண்ண போட்டி கடமைகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.