காசாவை சுற்றியுள்ள எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் மக்கள் தென்காசாவிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் காசா எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கிருந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டுமானால் அருகில் உள்ள எகிப்து நாட்டிற்குள்தான் செல்ல வேண்டும். இந்த நாட்டிற்குள் செல்ல ஒரே வழி தென்காசாவில் உள்ள ரஃபா கிராஸிங் எனும் பாதை ஆகும்.
அதனையும் இஸ்ரேல் மூடிவிட்டதாகவும், இனிமேல் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் இஸ்ரேலின் அனுமதியை பெற வேண்டும் என்றும் இஸ்ரேல் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எகிப்து நாட்டிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் எங்களை தொடர்பு கொண்டுதான் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.