ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த மாதம் சீனாவுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி)அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த பின் புடின் ரஷ்யாவுக்கு வெளியே தனது முதல் பயணமாக இந்த மாதம் சீனாவுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் பிடியாணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு ரஷ்ய அதிபர் கிரெம்ளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளுக்கு மட்டுமே பயணம் செய்திருந்தார்.
இதற்கு முன்னர், அவர் ரஷ்ய இராணுவத்திற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கிய நட்பு நாடான ஈரானுக்கும் ஒருமுறை பயணம் மேற்கொண்டார்.
சீனாவும் ரஷ்யாவின் நட்பு நாடாக உள்ளன. இருப்பினும் பீஜிங் உக்ரைன் மோதலின் போது தன்னை நடுநிலையாக காட்டிக் கொள்ள முயன்றதுடன், மொஸ்கோவின் போர்க்குற்றங்களைக் கண்டிக்க மறுத்தது.
ஓகஸ்ட் மாதம் கிரெம்ளின் இருதரப்பு ரஷ்ய – சீன பேச்சுவார்த்தைகளுக்கான அட்டவணையை உருவாக்கி வருவதாகக் கூறியிருந்த நிலையில், புடின் சீனாவுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.