தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்த பா. ம. க.
தலைவர் அன்புமணி மற்றும் த. மா. கா. தலைவர் ஜி. கே. வாசன், இலங்கை கடற்படையினரின்
அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டுமென மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக் கையில்,இராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பி டிக்க சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கச்சதீவு பகுதியில் கைது செய்துள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து இலங்கை கடற்படையினர் நிகழ்த்தியுள்ள இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வங்கக்கடலில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக் கக்கூடாது என்ற எண்ணத்தில்
இலங்கை செயல்பட்டு வருகிறது.அதற்கேற்ப ஒருபுறம் கடல் கொள்ளையர்கள், மறுபுறம் மீனவர்கள் கைது என இரு முனை தாக்குதலை நடத்துகிறது. எனவே இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற அத்து
மீறலுக்கு மத்திய அரசு நிரந்தரமாக முடிவு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை, ஜி. கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தவை வருமாறு,மீனவர்களை இலங்கை
கடற்படையினர் சிறைப்பிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருக்கும் போதே இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. இதனால் இரு நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவு பாதிக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் பிரச்னையில் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – என்றார்.