உலகில் நடப்பவை அனைத்தும் நொடியில் நமது கண்களுக்கு முன்னே கொண்டு வருவதற்கு பெரிய கருவியாக இருப்பது தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஒன்றான ஸ்மார்ட்போன்கள் தான். கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் மக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பதால் தான், கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. அதே சமயம் ஒரே நேரத்தில் இதன் வளர்ச்சியும் சுருங்கிவிட்டது.
சமீபத்திய தகவலின் படி, கடந்த 2017 ஆம் ஆண்டு உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் 700க்கும் மேற்பட்ட பிராண்டுகள் இருந்தன. இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகள் 18.3 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நுகர்வோர் தேவையில் ஏற்பட்ட குறைவு, அதிக ஸ்டாக் மற்றும் சந்தையின் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்டவை, ஏற்றுமதி குறைய முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டில், இந்த பிரிவில் ஆக்டிவாக உள்ள பிராண்டுகளின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு குறைந்து கிட்டத்தட்ட 250 ஆகி விட்டது. 70க்கும் மேற்பட்ட முக்கிய நாடுகளில் இந்த பிராண்டுகளின் விற்பனையை கண்காணிப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.
சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் திடீர் வளர்ச்சி, உள்ளூர் பிராண்டுகளின் தேவையான R&D செலவுகளை மேற்கொள்ள முடியாமல் போவது மற்றும் பல காரணிகள் இந்த வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.ஆய்வறிக்கைகள். முதிர்ச்சியடைந்த யூசர் பிளாட்பார்ம், சாதனத்தின் தரத்தை மேம்படுத்துதல், பொருளாதாரத் தடைகள், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் 4G முதல் 5G போன்ற முக்கிய தொழில்நுட்ப மாற்றங்கள் பல ஆண்டுகளாக செயலில் உள்ள பிராண்டுகளின் எண்ணிக்கையையும் அவற்றின் தொகுதிகளையும் படிப்படியாகக் குறைத்துள்ளன.நன்றாக வளர்த்த ஸ்மார்ட்ஃபோன் பயனர் தளம், பெரிய பிராண்டுகளின் சிறந்த R&D கண்டுபிடிப்புகள், கடுமையாக போட்டியிடும் பெரிய பிராண்டுகளின் விரிவாக்கம் மற்றும் கடினமான மேக்ரோ பொருளாதார நிலைமைகள் ஆகியவை இந்த சந்தை ஒருங்கிணைப்புப் போக்குக்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
மேலும், Xiaomi, Oppo மற்றும் Vivo போன்ற சீன பிராண்டுகளின் எதிர்பாராத வளர்ச்சி, சிறிய பிராண்டுகளின் வீழ்ச்சிக்கு காரணமாக மாறியுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் இந்த வீழ்ச்சி அதிகரித்தது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், பெரிய பிராண்டுகளுக்கு, இத்தகைய சூழலில் லாபத்தை உயர்த்துவது ஓரளவுக்கு எளிதானது என்றும், சிறிய பிராண்டுகள் சாதாரணமாக இயங்கவே போராடின என்பதும் குறிப்பிடத்தக்கது.