மருத்துவம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், அக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் மேலும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற நோயாளிகளுக்கான பராமரிப்பு, வரவேற்பு, உணவு பராமரிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவற்றிற்கு தேவைப்படும் அல்லது செய்ய வேண்டிய வேலைகள் மேலும் அத்தியாவசிய சேவைகளாகும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.