இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனப் பொதுமக்களின் எண்ணிக்கை தற்போது 3,487 ஆக உயர்ந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் 12,065 பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
இறந்த பலஸ்தீனியர்கள் மட்டுமல்ல, காயமடைந்த பாலஸ்தீனியர்களில் 70 சதவீதம் பேர் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்.
இஸ்ரேலின் ஹமாஸ் நெருக்கடியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முழு ஆதரவையும் இஸ்ரேல் பெற்றுள்ளது.
இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா முன்வந்திருப்பது நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
காஸா பகுதி மீது அமெரிக்கா விரும்பியபடி தாக்குதல் நடத்த இஸ்ரேலின் ஒப்புதலை அமெரிக்கா பெற்றுள்ளதை உறுதி செய்வதாகவும் பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காஸா பகுதியில் சிக்கியுள்ள பாலஸ்தீனர்களுக்கு நாளை (20) மனிதாபிமான உதவிகளை அனுப்ப முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
‘ரஃபா’ நுழைவாயிலை திறக்க எகிப்து அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இதனைத் தெரிவித்திருந்தார்.