வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இறக்காமம் சமுர்த்தி வங்கியினால் சேமிப்பு மற்றும் கணக்கு திறக்கும் நடவடிக்கை மூன்றாம் நாள் நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டு அதற்கான பாஸ் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நேற்றையதினம் (19.10.2023) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் தலைமைப்பீட சமூர்த்தி முகமையாளர், முகாமத்துவ பணிப்பாளர், வங்கி முகாமையாளர், வலய மற்றும் வங்கி உதவி முகாமையாளர்கள், வங்கி மற்றும் பிரிவுகளில் கடமையாற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


