Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரோவின் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று!

இஸ்ரோவின் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று (20)நடைபெறுகிறது. இந்த சோதனையில் மனிதர்களை ஏற்றி செல்லும் விண்கலன் பாதுகாப்பாக தரையிறங்கி பரிசோதிக்கப்படும்.

இந்தியா சொந்தமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த கனவை சாத்தியப்படுத்த தயாரிக்கப்பட்டதுதான் ககன்யான் திட்டம். எதிர்வரும் காலங்களில் சர்வதேச விண்வெளி நிலையம் கலைந்து போக இருக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்கு என தனியான விண்வெளி மையத்தை உருவாக்க இருக்கிறார்கள். விண்வெளி துறையை பொறுத்த அளவில் ரஷ்யா, இந்தியாவுக்கு நெருங்கிய நண்பன் என்பதால் இந்த விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்களை தங்க வைக்க நாம்மால் கோர முடியும். ஆனால் அதற்கு நமக்கு முதலில் சில அனுபவங்கள் தேவைப்படுகிறது.

அதில் ஒன்றுதான் சொந்தாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன். இந்தியா சார்பில் ராகேஷ் சர்மா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளியில் பறந்தார். அவரை பறக்க வைத்தது சோவியத் ரஷ்யா. எனவே இந்தியா இந்த முறை எந்த நாடுகளின் உதவியுமின்றி தங்களது வீரர்களை விண்ணில் பறக்க வைக்க முடிவெடுத்திருக்கிறது. இதற்காக போடப்பட்ட ககன்யான் திட்டம் வரும் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக இந்த திட்டத்தின் முதல்கட்ட சோதனை இன்று நடைபெறுகிறது.

அதாவது, மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் ராக்கெட்டிலிருந்து மனிதர்கள் இருக்கும் கலனை பூமியில் பத்திரமாக தரையிறங்க வைக்கும் மிஷன் இன்று பரிசோதனை செய்து பார்க்கிறது இஸ்ரோ. இதற்காக இஸ்ரோ தனியாக ஒரு ராக்கெட்டை வடிவமைத்திருக்கிறது. இந்த ராக்கெட்டின் உச்சியில் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் மாதிரி கலன் (Crew Module) இருக்கும். இந்த கலனை ஏந்திக்கொண்டு ராக்கெட் 17 கி.மீ உயரத்திற்கு ஒலியை விட 1.5 மடங்கு வேகத்தில் பறக்கும். அங்கிருந்து மாதிரி கலன் மட்டும் தனியாக பிரிந்து வங்கக்கடலை நோக்கி வரும். கடலுக்கும், கலனுக்கும் சுமார் 2 கி.மீ தொலைவு இருக்கும் போது கலனில் உள்ள பாராசூட் விரிந்து கலனின் வேகத்தை குறைக்கும்.

இவ்வாறு வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் பாதுகாப்பாக இந்த கலன் தரையிறங்கும். அங்கு கடற்படையினர் இந்த கலனை மீட்டு கரைக்கு கொண்டு வருவார்கள். இந்த சோனை ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனைதான். மொத்தமாக நான்கு கட்ட சோதனைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

July 24, 2026
Next Post
அரசியலாக்கப்படும் காசா, இஸ்ரேல் போர்; கணக்கெடுப்பில் பிரதமருக்கு எதிராக திரும்பிய மக்கள்!

அரசியலாக்கப்படும் காசா, இஸ்ரேல் போர்; கணக்கெடுப்பில் பிரதமருக்கு எதிராக திரும்பிய மக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு