இந்தாண்டின் (2023) மூன்றாவது காலாண்டில் நோக்கியா நிறுவனத்தின் உபகரணங்களின் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு காலகட்டத்தில் உலக சந்தையில் அதிக ஸ்மாட்போன்களை விற்பனை செய்த நிறுவனமாக நோக்கியா தான் இருந்தது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நோக்கியா உபகரணங்களின் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது.
இதனால் லாபமும் குறைந்துள்ளது. எனவே, செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 14,000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
நோக்கியாவில் தற்போது 86,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ஆட்குறைப்புக்கு பிறகு 72,000 முதல் 77,000 வரையிலான ஊழியர்கள் இருப்பார்கள் என கூறப்படுகிறது.