Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனையாக, டிவி-டி1 விண்கலம் மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று (21) காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுவதாக திட்டமிப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வானிலை காரணமாக மாதிரி விண்கலம் 8.30 மணிக்கு தாமதமாக செல்லும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 15 நிமிடங்கள் தாமதம் ஆகலாம் என கூறப்பட்டது . இந்நிலையில் காலை 8.45 மணியளவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த சோதனை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த திட்டத்தை இன்று நடத்த முடியவில்லை எனவும் இந்த கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரம் காட்டிவருகிறது.

‘விண்ணுக்கு செல்லும் வாகனம்’ என்று பொருள்படும் வகையில், ‘ககன்யான்’ என்று இத்திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வரும் இத்திட்டம் வரும் 2025ஆம் ஆண்டில் செயற்படுத்தப்பட உள்ளது.

அதற்கு முன்பு 3 கட்ட பரிசோதனைகளை நடத்த இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று விண்ணுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது.

அதாவது, மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் விண்கலத்தின் (Crew Module) மாதிரி கலம், தரையில் இருந்து 17 கிலோ மீற்றர் தூரம் வரை அனுப்பப்பட்டு, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டுவரப்படும்.

இதில் ஏதேனும் ஒரு சூழலில் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தால், அதில் உள்ள வீரர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த முதல்கட்ட சோதனைக்கு டிவி-டி1 எனும் ஒற்றை பூஸ்டர் (விகாஸ் இயந்திரம்) கொண்ட விண்கலம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த விண்கலம் மூலம் ஆளில்லாத விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான 13 மணி நேர கவுன்ட் -டவுன் நேற்று(20) இரவு 7 மணிக்கு தொடங்கியது.

2040ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ இலக்கு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணித்த இலங்கையர்கள் மீட்பு
செய்திகள்

கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணித்த இலங்கையர்கள் மீட்பு

June 9, 2026
நேர்முகத் தேர்வில் முன்னுரிமை கோரி யாழ் சுகாதார தொண்டர்களின் போராட்டம் தீவிரம்!
செய்திகள்

நேர்முகத் தேர்வில் முன்னுரிமை கோரி யாழ் சுகாதார தொண்டர்களின் போராட்டம் தீவிரம்!

June 9, 2026
நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி மண் மேட்டில் மோதி விபத்து!
செய்திகள்

நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி மண் மேட்டில் மோதி விபத்து!

June 9, 2026
தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!
செய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!

June 9, 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
Next Post
இஸ்ரேலுடன் இணைந்து செயற்பட்டவர் சஹ்ரான்; ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு!

இஸ்ரேலுடன் இணைந்து செயற்பட்டவர் சஹ்ரான்; ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.