மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படும்
என்று இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பான விசேட கலந் துரையாடல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாதகமாகக் காணப்படும் கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. அத்துடன், கல்வித்துறை சார் திணைக்கள அதிகாரிகளிடம் விடயம் தொடர்பாக கேட்டறிந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், கல்வி அமைச்சின் ஊடாக இந்தப் பிரச்னைக்கான தீர்வை விரைவாக பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.