வரி செலுத்த வேண்டிய பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வரி செலுத்துவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அதி வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இன்னும் விரும்பிய இலக்குகளை அடையவில்லை. உலகிலேயே மிகக்குறைந்த வரி வருவாயைக் கொண்ட நாடு நாம்தான்.
இலக்கை நோக்கி எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அது சுருங்கிய பொருளாதாரத்துடன் செல்ல வேண்டும். அதேசமயம் வங்கி வட்டி வீதங்கள் அதிகரித்து, வியாபாரம் பாதிக்கப்பட்டு, வருமானம் குறைந்துள்ளது.
ஒரு அரசாங்கம் வரி விதிக்க வேண்டும். முடிந்தவரை, வரிகளால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம் வழங்க நாங்கள் பணியாற்றுகிறோம். வரி அடிப்படையை அதிகரிப்பதே எங்கள் இலக்கு.
உண்மையில் வரி செலுத்த வேண்டிய பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வரி செலுத்துவதில்லை. வரி செலுத்த அவர்களை வழிநடத்துதல் மற்றும் அதிக வரிச்சுமையை சுமப்பவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.