Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய மீலாதுன் நபி விழாவில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய மீலாதுன் நபி விழாவில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

2 years ago
in செய்திகள்

மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ் வருடத்திற்கான தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முசலி தேசிய பாடசாலையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் முழு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் மற்றும் முசலியில் காதர் மஸ்தான் தலைமையில் பல்வேறு கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தேசிய மீலாதுன் நபி விழா ஏற்பாடுகள் குறித்து மன்னார் மாவட்டத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில்  ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள சென்ற  பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒரு மதத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் பிராந்திய ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமை குறித்தும்  நிகழ்வின் ஏற்பாட்டாளரான பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் செயல்பாடுகள் குறித்தும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் கட்சி  சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அரசியல் நிகழ்வு போல் குறித்த  தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம் பெறுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
இன்று பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைக்க தயாராகும் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள்!

இன்று பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைக்க தயாராகும் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு