ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் (Jhonson and Jhonson) டெங்கு காய்ச்சலுக்கான மாத்திரையை உருவாக்கியுள்ளது.
நிறுவனம் வழங்கிய தரவுகளின்படி, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், நோயைக் குணப்படுத்துவதற்கான நேர்மறையான நிலை ஒரு சில நோயாளிகளில் காட்டப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
வளர்ந்து வரும் நோய் அச்சுறுத்தலான டெங்குவிற்கு தற்போது குறிப்பிட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை என்று சிகாகோவில் உள்ள அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ட்ராபிகல் மெடிசின் அண்ட் ஹைஜீன் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இது அதன் வருடாந்திர கூட்டத்தில் இந்த சிகிச்சைகள் பற்றிய தரவை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.