Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட புடின்!

உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட புடின்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக ரெலிகிராம் சனலான ‘ஜெனரல் எஸ்.வி.ஆர்’ஐ மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தனது படுக்கையறை தரையில், உணவு மற்றும் பானங்களுடன் கவிழ்ந்த மேசையுடன் புடின் படுத்திருப்பதைக் அதிகாரிகள் கண்டுள்ளனர்.“அநேகமாக, புடின் விழுந்த போது, மேசை மற்றும் பாத்திரங்களை அடித்து தரையில் தள்ளியுள்ளார். இது சத்தத்தை ஏற்படுத்தியது.

புடின் கண்களை உருட்டிக் கொண்டு தரையில் படுத்துக் கொண்டிருந்தார்.பணியில் இருந்த மற்றும்
அருகிலுள்ள அறைகளில் இருந்த வைத்தியர்கள் உடனடியாக அழைக்கப்பட்டனர்” என்று ஜெனரல் எஸ்.வி.ஆர் இல் குறிப்பிடப்பட்டுள்ளதாக மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

புடின் உடனடியாக அவரது இல்லத்தில் உள்ள பிரத்தியேக அறைக்கு மாற்றப்பட்டதாகவும், அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் அமைந்துள்ள சிறப்பு தீவிர சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு புடினுக்கு வைத்தியர்கள் புத்துயிர் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உதவி சரியான நேரத்தில் வழங்கப்பட்டது, இதனால் புடின் சுயநினைவு பெற்றார்,” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், புடினின் உடல்நிலை மோசமடைந்தது பற்றிய கூற்றுக்களை கிரெம்ளினால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்கு பிறகு புடினுக்கு நெருக்கமான பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் சாத்திய மான நடவடிக்கைகள் குறித்து திங்களன்று ஆலோசனை நடத்த புடின் ஒப்புக்கொண்ட தாகவும்” மிரர் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, புடினின் உடல்நிலை மோசமடைந்ததாக பல தகவல்கள் வெளியாகியிருந்தன.புடினுக்கு புற்றுநோயாக இருக்கலாம் அல்லது பார்கின் சன் நோயாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், புடின் “நல்ல ஆரோக்கியத்துடன்” இருக்கிறார் என்று கிரெம்ளின் பலமுறை மறுப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
செய்திகள்

முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

September 8, 2026
Next Post
தமிழ் தேசியம் பேசி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தரவை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் நுழைய முடியாது!

தமிழ் தேசியம் பேசி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தரவை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் நுழைய முடியாது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு