வடக்கு, கிழக்கின் கோயில்கள், ஆலய தர்மகர்த்தா சபையினர் – பரிபாலகர்கள், ஆதீன கர்த்தாக்கள், சைவ சமய அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நல்லை ஆதீனத்தில் அதன் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு அனைத்து ஆலயங்கள், ஆதீனங்கள், சைவ சமய அமைப்புகளின் பிரதிநிதிகள் மூவரை தவறாது பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சைவக் கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சைவமக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்னைகள் தொடர்பாக ஆராய்ந்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.