Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“கிறிப்டோ” நாணயம் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

“கிறிப்டோ” நாணயம் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

2 years ago
in முக்கிய செய்திகள்

பொதுமக்கள் பாடுபட்டு உழைத்த தமது பணத்தைப் பாதுகாக்குமாறும் இணையத்தளம், ஏனைய ஊடக வழிகள் மற்றும் நேரடியாக எவர் மூலமாக வழங்கப்படும் எண்ணிம (கிறிப்டோ) நாணய திட்டத்தில் முதலீடு செய்யாமல் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. மத்திய வங்கி நேற்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

“கிறிப்டோ” என்று பொதுவாக குறிப்பிடப்படும் எண்ணிம நாணயங்களை ஊக்குவித்தல் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதை வசதிப்படுத்தல் அத்துடன் விற்பனை செய்தல் என்பனவற்றில் ஈடுபடுகின்றவர்களை அத்தகைய நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். பொதுமக்கள் விசாரணைகளையும் அவதானிக்கப்படும் அபிவிருத்திக்களையும் கருத்தில்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கிறிப்டோ நாணயங்களைப் பயன்படுத்துவதுடனும் முதலீடு செய்வதுடனும் தொடர்புடைய குறிப்பிடத்தக்க இடர் நேர்வுகள் பற்றி பொதுமக்களுக்கு மீளவும் வலியுறுத்துகின்றது.

கிறிப்டோ நாணயம் என்பது ஒரு நாட்டின் நாணய அதிகார சபையால் இன்றி தனியார் நிறுவனங்களினால்
உருவாக்கப்படுகின்ற மெய்நிகர் நாணய வகையொன்றாகும்.

கிறிப்டோ – வர்த்தகம், இலாபகரமான முதலீடொன்றாக சில நிறுவனங்களினால் பரந்தளவில் ஊக்குவிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் தாம் மேற்கொண்ட கிறிப்டோ முதலீடுகளின் மூலமாக பாரியளவில் நட்டங்களை சந்தித்துள்ளனர் என்றும் சில சந்தர்ப்பங்களில் கிறிப்டோவுடன் தொடர்புடைய திட்டங்களுடாக முன்னெடுக்கப்பட்ட நிதியியல் மோசடிகளுக்கும் ஆளாகின்றனர் என்றும் இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்கப்பெறுகின்ற அண்மைய முறைப்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன. கிறிப்டோ நாணயத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் குறிப்பிடத்தக்க நிதியியல், தொழிற்பாட்டு, சட்ட மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய இடர்நேர்வுகள் அதேபோன்று வாடிக்கையாளர் பாதுகாப்பு கரிசனைகள் பற்றி இலங்கை மத்திய வங்கி 2018, 2021, அத்துடன் 2022,ஆம் ஆண்டுகளில் ஊடக வெளியீடுகளினூடாக ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளது.

மேலும், கிறிப்டோ நாணயங்கள், இலங்கையில் சட்டப்பூர்வமான நாணயமானவையல்ல என்பதுடன்
நாட்டில் அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தல் பாதுகாப்புக்களும் காணப்படவில்லை. கிறிப்டோ நாணயத்தை கொள்வனவு செய்வதற்கு பற்று அட்டைகள் மற்றும் கடனட்டைகள் போன்ற இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டைகள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. கிறிப்டோ நாணயம் முறைசாரா வழிகள் ஊடாக தொழிற்படுவதனால், தேசிய பொருளாதாரத்துக்கு அது பங்களிப்பதில்லை என்பதுடன் நாட்டின் பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயத்தையும் இழக்க நேரிடுகின்றது. கிறிப்டோ முதலீடுகளை அடிப்படையாகக்கொண்டு, உயர்ந்தளவான வருவாய்களுக்கான வாக்குறுதியுடன் தொழிற்படுகின்ற பல எண்ணிக்கையிலான நிதியியல் மோசடிகள் அதிகரித்து வருகின்றன தொடர்பிலும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். கிறிப்டோ நாணயத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அதிகளவிலான வருமானத்தை வழங்குவதாக உறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதும் அதேபோன்று மோசடியான கிறிப்டோ நாணய திட்டங்களில் முதலீடு செய்யுமாறு கூறி தனிப்பட்டவர்களை ஏமாற்றுவதும் இம்மோசடிகளில் உள்ளடங்குகின்றன – என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்
காணொளிகள்

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்

May 12, 2025
மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை
காணொளிகள்

மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

May 12, 2025
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது
செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது

May 12, 2025
வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது
செய்திகள்

வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

May 12, 2025
முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்
உலக செய்திகள்

முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்

May 12, 2025
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க தயார்; மோடி
உலக செய்திகள்

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க தயார்; மோடி

May 12, 2025
Next Post
எடப்பாடிக்கு பொதுச்செயலாளர் பதவி!

எடப்பாடிக்கு பொதுச்செயலாளர் பதவி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.