Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமைச்சரவையில் மாற்றம்; இணைத்துக் கொள்ளப்படவுள்ள புதிய முகங்கள்!

அமைச்சரவையில் மாற்றம்; இணைத்துக் கொள்ளப்படவுள்ள புதிய முகங்கள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவை மீண்டும் திருத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்டத்தை வெற்றி கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கும் அந்த வட்டாரங்கள் மேலும் சில புதிய முகங்கள் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

அமைச்சுப் பதவிகளை மாற்றுவதற்கான யோசனைகள் ஏற்கனவே அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதன் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்களுக்கு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பத்து பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் அந்த கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காததால், அதனை தொடர்ந்து வலியுறுத்துவதில்லையென பெரமுன முடிவு செய்தது.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தொடர்ந்து அநீதிகள் நடந்தால், வரவு செலவுத் திட்டத்திலோ அல்லது நெருக்கடியான காலகட்டத்திலோ உரிய பதிலடி கொடுப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, சில அமைச்சர்கள் மற்றும் அமைச்சுச் செயலாளர்களின் செயற்பாடுகள் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதை அரசாங்கம் அவதானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் நாட்களில் அமைச்சுக்களின் பல செயலாளர்கள் மாற்றப்பட உள்ளனர்.

சுகாதார அமைச்சர் பதவி உட்பட மூன்று அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி அண்மையில் மாற்றினார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

September 16, 2026
Next Post
“சம்பந்தன் வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது”; தமிழ்க் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்களும் பதவி துறக்க வேண்டும்; ஆனந்தசங்கரி!

“சம்பந்தன் வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது"; தமிழ்க் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்களும் பதவி துறக்க வேண்டும்; ஆனந்தசங்கரி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.