Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“சம்பந்தன் வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது”; தமிழ்க் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்களும் பதவி துறக்க வேண்டும்; ஆனந்தசங்கரி!

“சம்பந்தன் வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது”; தமிழ்க் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்களும் பதவி துறக்க வேண்டும்; ஆனந்தசங்கரி!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாகத் தமது பதவிகளை இராஜிநாமா செய்ய வேண்டும். இதுவே காலத்தின் கட்டாயமும் தேவையுமாகும்.”

இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றஉறுப்பினர் பதவியை ராஜினாமா
செய்ய வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி. கேட்டுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையைச் சேர்ந்த சட்டத்தரணி வி.தவராசா, இரா.சம்பந்தனுக்கு எழுதிய கடிதத்தில், “சம்பந்தன் வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது” என்று சுமந்திரன் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,“அமரர்களான தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோரால் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சிதைத்து 2004ஆம் ஆண்டு கூட்டணியில் வளர்க்கப்பட்ட சம்பந்தன் வளர்த்த கடாவாக மட்டுமல்ல ஓநாயாகவும் மாறி வரலாற்றுத் துரோகம் செய்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குச் செய்த துரோகம் தற்போது சம்பந்தனுக்குத் திரும்பி விட்டது.
ஆகையால் சம்பந்தன் மட்டுமல்ல 2004ஆம் ஆண்டு துரோகத்தனத்தால் தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாகத் தமது பதவிகளை இராஜிநாமா செய்யவேண்டும். இதுவே காலத்தின்
கட்டாயமும் தேவையுமாகும்.அதுமட்டுமல்ல அழிந்துபோன தமிழர்களின் ஜனநாயக மரபைக் கட்டிக்காப்பதற்கும் தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷைகளை மீண்டும் நம்பிக்
கையோடு கட்டியெழுப்பவதற்கும் இவர்கள் அனைவரும் இராஜிநாமா செய்ய வேண்டும்.” – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
மட்டு ஜெயந்திபுர சிங்கள மயானத்துக்குள் கழிவுகளை கொட்டியவர் கைது; தேரரின் முறைப்பாட்டுக்கு உடனடியாக களமிறங்கிய பொலிஸ்!

மட்டு ஜெயந்திபுர சிங்கள மயானத்துக்குள் கழிவுகளை கொட்டியவர் கைது; தேரரின் முறைப்பாட்டுக்கு உடனடியாக களமிறங்கிய பொலிஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு