Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கமலின் “தலைவன் இருக்கின்றான்”; ரஹ்மானுக்கு பதில் ஹரிஷ்?

கமலின் “தலைவன் இருக்கின்றான்”; ரஹ்மானுக்கு பதில் ஹரிஷ்?

3 years ago
in சினிமா, செய்திகள்

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.
அதன்படி 233வது படத்தை H வினோத்தும், 234வது படத்தை மணிரத்னமும் இயக்கவுள்ளனர்.

லோகேஷை தொடர்ந்து இளம் இயக்குநரான H வினோத்துடன் கமல் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் பற்றிய அப்டேட் வெளியாகவுள்ள நிலையில், H வினோத்துக்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். H வினோத்துக்கு வாழ்த்து சொன்ன லோகேஷ் சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் H வினோத். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை இயக்கினார். அஜித்துடன் தொடர்ச்சியாக 3 படங்களில் வேலை பார்த்த H வினோத், தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்கவுள்ளார்.

விக்ரம் வெற்றிக்குப் பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியுள்ளார் கமல். அதில் H வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகவுள்ளதாகவும், ரொம்பவே குறுகிய நாட்களில் படப்பிடிப்பை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்நிலையில் KH 233 படத்தின் டைட்டில் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது, கமல் – ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் தொடங்கப்பட்ட திரைப்படம் ‘தலைவன் இருக்கின்றான்.’ இந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் வெளியாகாமல் இருந்தது. தற்போது இந்தப் படம் டேக் ஆஃப் ஆக வாய்ப்பில்லை என்பதால், தலைவன் இருக்கின்றான் என்ற டைட்டிலை KH 233 படத்திற்காக பயன்படுத்த கமல் முடிவு செய்துள்ளாராம். அதேபோல் ஏஆர் ரஹ்மானுக்குப் பதிலாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளாராம்.

நவம்பர் 7ம் தேதி கமலின் பிறந்தநாள் என்பதால், இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் KH 234 படங்களின் அப்டேட் வெளியாகவுள்ளன. அந்த வரிசையில் KH 233 ஷூட்டிங் பற்றிய தகவலும் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, 2024 மார்ச் மாதம் KH 233 ஷூட்டிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்பாக KH 233 டைட்டில் தலைவன் இருக்கின்றான் தான் என அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஹெச் வினோத்துக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள லோகேஷ், கமல் சாரின் KH 233 படத்தை இயக்கும் வினோத் அண்ணாவுக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வினோத்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியையும் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
காணொளிகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

July 23, 2026
கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

July 23, 2026
அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!
செய்திகள்

மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!

July 23, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
Next Post
தேசிய கல்வி நிறுவகத்தில் விசேட சித்தி பெற்ற ஆசிரிய மாணவர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு!

தேசிய கல்வி நிறுவகத்தில் விசேட சித்தி பெற்ற ஆசிரிய மாணவர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு