இஸ்ரேலுக்கு தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து வரும் ஹமாஸ் அமைப்பினர் லெபனானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில்அமைந்துள்ள கிரியாத் ஷ்மோனா நகரின் மீது சரமாரி ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதாவது ஒரே நேரத்தில் சுமார் 12 ஏவுகணைகளை ஹமாஸ் அமைப்பினர் ஏவியுள்ள நிலையில் இந்த தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை கடந்த 24 நாட்களுக்குள் 3 இஸ்ரேலின் ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
இதனிடையே தெற்கு லெபனான் மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானம் நேற்று முன்தினம் மேற்கொள்ளவிருந்தது தாக்குதலை முறியடித்துள்ளதாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்ல அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஹிஸ்புல்லாவின் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் நாட்டு அதிகாரிகள் மிகவும் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே காசாவில் இருந்து மீண்டும் தெற்கு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதியான அஸ்டொட் பகுதி மீது கடுமையான ரொக்கட் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் தெற்கு இஸ்ரேலில் உள்ள பகுதிகள் எங்கும் அபாய ஒலி எழுப்பப்படுவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக இஸ்ரேல் காசா மீது மும்முனை தாக்குதலை முன்னெடுத்து தரைவழியாக முன்னேறி வருவதாக கூறப்படும் நிலையில் இஸ்ரேல் மீது இந்த ஏவுகணை தாக்குதலை சுரங்கப்பகுதிகளில் இருந்துஹமாஸ் முன்னெடுப்பதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையில் தரைவழியாக நுழைந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இஸ்ரேல் இராணுவம் பலர் பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதில் ஜெருசலேம் படைப்பிரிவின் தளபதியும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை காசாவில் ஹமாஸ் அமைப்புடன் இடம்பெற்ற மேதலில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் படைத்துறை அறிவித்துள்ளது.
இந்த மோதலில் 188 பராக் படைப்பிரிவின் 53 வது பட்டாலியனின் தளபதியான 33 வயதுடைய லெப்ரினன்ட் கேணல் சல்மான் ஹபாகா, என்ற தளபதியே உயிரிழந்தவராவார்.
அதாவது புதன்கிழமை இரவு வடக்கு காசா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதியிலிருந்து இதுவரை 300 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் இதில் 18 பேர் தற்போதைய தரைப்படை நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய படைத்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை காசா பகுதியில் நடத்தப்படும் தாக்குதலில் தினமும் 420 குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைவதாக யுனிசெப் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் காசாவில் இறந்தவர்களில் ஏறக்குறைய 70 வீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.