Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி

1 year ago
in செய்திகள்

யாழ்ப்பாணத்திற்குஇன்று (17) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர , யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் உரையாடி அப்பகுதி விவசாய காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வலி. வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒரு பகுதி விவசாய காணிகளை விடுவித்து, விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

‘உறுமய’ காணி வழங்கப்படும் திட்டத்தின் ஊடாக ஒட்டகப்புலம் பகுதியில் 408 குடும்பங்களுக்கு 235 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்பட்டது. விவசாய நடவடிக்கைக்காக பலாலி வடக்கு, பலாலி கிழக்கு, பலாலி தெற்கு, வயாவிளான் மேற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் காணிகள் விடுவிக்கப்பட்டன.

எனினும் குறித்த விவசாய காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினர் கடுமையான நிபந்தனைகளுடன், கட்டுப்பாடுகளை விதித்தே விவசாய நிலங்களுக்கு மக்களை அனுமதித்துள்ளனர்.

குறிப்பாக, பின்மாலை பொழுதுகளின் பின்னர் காணிகளுக்குள் நிற்க முடியாது, விவசாய நிலங்களில் ஓய்வு எடுப்பதற்கு தற்காலிக கொட்டகைகளை அமைக்க அனுமதியில்லை, போன்ற கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.

அத்துடன் குறித்த காணிகளை சுற்றி உயர் பாதுகாப்பு வலய வேலிகள் அகற்றப்படாமல் இருப்பதனால், சுற்று பாதைகள் ஊடாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலைமைகளும் காணப்படுகிறது.

உயர் பாதுகாப்பு வேலிகளை பின் நகர்த்த 18 மில்லியன் ரூபாய் செலவு என இராணுவத்தினர் மதிப்பீடு செய்து, நிதி கோரியுள்ள நிலையில், அந் நிதி இராணுவத்தினருக்கு வழங்கப்படாமையால், இராணுவத்தினர் வேலியை நகர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி, யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் கலந்துரையாடி, விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்குள் சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!
செய்திகள்

காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!

August 10, 2026
பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!
செய்திகள்

பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!

August 10, 2026
கடற்பரப்புகளில் பலத்த காற்று; அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

கடற்பரப்புகளில் பலத்த காற்று; அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

August 10, 2026
ஹோர்முஸ் நீரிணை திறப்பு; அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை திறப்பு; அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்!

August 10, 2026
சோதனையில் சிக்கிய தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்!
செய்திகள்

சோதனையில் சிக்கிய தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்!

August 10, 2026
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!
செய்திகள்

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

August 10, 2026
Next Post
மஸ்கெலியாவில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழும் நடவடிக்கை அதிகரிப்பு

மஸ்கெலியாவில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழும் நடவடிக்கை அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.