Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசங்களாக உள்ள மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்கள் அங்கு இருந்ததற்கான ஆதாரங்களை ஒரு வாரகாலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பு தொடர்பில் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம்(3) இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது குடியேற்றவாசிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் 1962ஆம் ஆண்டு தொடக்கம் 1983ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த பகுதியில் 13குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் 1983ஆம் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையினால் குறித்த பகுதியில் 12பேர் விடுதலைப்புலிகளினால் படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இடம்பெயர்ந்து சென்றதாகவும் மீண்டும் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குவந்ததன் பின்னர் அப்பகுதியில் மீள குடியமர வந்ததாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லாத நிலையில் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வாரத்தில் அப்பகுதியில் அவர்கள் வசித்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு 13பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்த ஆவணங்கள் யுத்த காலப்பகுதியில் காணாமல்போயுள்ளதனால் அவற்றினை அரச அதிகாரிகள் வழங்காத நிலையுள்ளது தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வழக்கானது எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,இன்று குறித்த வழக்கில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் குடியேறியுள்ள 13பேர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததுடன் மகாவலி அபிவிருத்தி திணைக்களம் சார்பிலும் சட்டத்தரணி முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கெரண்டி எல்ல பஸ் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு; பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
செய்திகள்

கெரண்டி எல்ல பஸ் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு; பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

May 14, 2025
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்து செய்ய கோரும் மனு 26 ஆம் திகதி விசாரணைக்கு
செய்திகள்

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்து செய்ய கோரும் மனு 26 ஆம் திகதி விசாரணைக்கு

May 14, 2025
நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற பேருந்து சக்கரம் கழன்று விபத்து
செய்திகள்

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற பேருந்து சக்கரம் கழன்று விபத்து

May 14, 2025
கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலமாக மீட்பு
செய்திகள்

கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலமாக மீட்பு

May 14, 2025
உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் யாழ் சிறுமி தெரிவு; பெற்றோர் முன்வைத்துள்ள கோரிக்கை
செய்திகள்

உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் யாழ் சிறுமி தெரிவு; பெற்றோர் முன்வைத்துள்ள கோரிக்கை

May 14, 2025
பொதுமக்கள்- ரெட் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுகள்
செய்திகள்

பொதுமக்கள்- ரெட் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுகள்

May 14, 2025
Next Post
அமைச்சர்கள் தங்களுடைய பண கஷ்டங்களை மக்களுக்காகவே தாங்கி கொள்கின்றனர்; இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த!

அமைச்சர்கள் தங்களுடைய பண கஷ்டங்களை மக்களுக்காகவே தாங்கி கொள்கின்றனர்; இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு