சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோ பொதி செய்யப்படாத சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்படாத சிவப்பு சீனி கிலோ கிராம் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 330 ரூபாவாகும்.
மேலும், ஒரு கிலோ கிராம் பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 295 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனி கிலோ கிராம் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 350 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்த விலைகளானது இன்று(03) முதல் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.