இரண்டு பெண்களின் தவறான புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனால் உருவாக்கப்பட்ட தவறான புகைப்படங்கள் ஒன்லைனில் அதிகமாக பரப்பட்டதையடுத்து, அது தொடர்பான குற்றவியல் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 2025 மார்ச் 29 அன்று அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 2025 ஏப்ரல் 10 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.